இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக திட்டமிட்டிருந்த தனது இந்தியப் பயணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன் புது டெல்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு எழுந்த பாதுகாப்பு கவலைகளே இந்த பயணம் ஒத்திவைக்கப்படக் காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நிலவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, நெதன்யாகு அடுத்த ஆண்டு ஒரு புதிய தேதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
நெதன்யாகு இதற்கு முன்னர் இஸ்ரேலில் நடந்த தேர்தல்கள் காரணமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் திட்டமிட்டிருந்த இந்திய பயணங்களையும் ரத்து செய்திருந்தார்.
நெதன்யாகுவின் இந்த பயணம், உலக அளவில் தனது செல்வாக்கை காட்டவும், பிரதமர் மோடியுடனான நெருங்கிய தனிப்பட்ட உறவை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது.