Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

Advertiesment
ரஜினி

vinoth

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (07:37 IST)
இந்த மாதத் தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்து பீதியைக் கிளப்பினார். அதற்கு சுந்தர் சி சொன்னக் கதை ரஜினிக்குப் பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. தயாரிப்பாளரான கமல் கொடுத்த நேர்காணலிலும் ‘என் நட்சத்திரத்துக்குப் பிடித்த கதையை படமாக்குவதுதான் எனக்கு ஆரோக்யமானது’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சினிமாப் பத்திரிக்கையாளர் அந்தணன் சுந்தர் சி வெளியேறதற்கான காரணம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்துக்காக ரஜினி தரப்பு, கமல் தரப்பு, கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள், ரஜினியின் குடும்பத்தினர் என பலரிடம் கதை சொல்ல சொல்லி சுந்தர் சியை அலையவைத்துள்ளனர். அதனால் கடுப்பான சுந்தர் சி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்தான் இந்த முடிவை எடுத்துள்ளார்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!