பீகாரில் கண் குறைபாடு உள்ள ஒருவர் தனது குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணப்பெண் அவரது குறையை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கண்ணில் குறைபாடு இருப்பதை மறைத்த மணமகன், குறைபாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.
அப்போது திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து மணமகள் மற்றும் அவரது வீட்டார் மணமகனிடம் விசாரித்த போது, தனக்கு கண் குறைபாடு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
மணமகனுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருப்பதை அறிந்த மணமகள், இந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால், இந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.