Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

Advertiesment
இந்தியா

Mahendran

, திங்கள், 24 நவம்பர் 2025 (12:29 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக விளையாடி வரும் இந்திய அணி 50 ஓவர்களில்) ஏழு விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்திய அணி 'ஃபாலோ-ஆன்' ஆகும் ஆபத்து இருப்பதாக வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஓரளவு நிதானமாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார். ஆனால், அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல். ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். தற்போது, வாஷிங்டன் சுந்தர் 17 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ ஜான்சன் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னொரு முக்கிய சுழற்பந்து வீச்சாளரான சைமன் இரண்டு விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!