சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில், தற்போது மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில், 11 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா உட்பட பல நாடுகள் கலந்து கொண்டன.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தைவான் அணிகள் மோதின. இதில் 35-28 என்ற கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை கபடி தொடர்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், "உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த கபடி மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த மன உறுதி, திறமை மற்றும் அர்ப்பணிப்பை வீராங்கனைகள் வெளிப்படுத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.