Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

Advertiesment
விஷால்

Bala

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (10:17 IST)
தற்போது விஷால் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக நடிகர் அர்ஜுனிடம் பணிபுரிந்த விஷாலை ஹீரோவாக்கி அழகு பார்த்தது அர்ஜுன்தான் .
 
செல்லமே படத்திற்குப் பிறகு தொடர்ந்து சத்யம், திமிரு, சண்டக்கோழி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். தயாரிப்பாளர் சங்க தலைவராக செயல்பட்டார். அதன் பிறகு நடிகர் சங்க செயலாளராக தற்போது இருந்து வருகிறார் விஷால். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் தன்னுடைய திருமணம் என்று உறுதியாக இருந்த விஷால் கூடிய சீக்கிரம் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருக்கிறார்.
webdunia
 
இன்னொரு பக்கம் நடிகர் சங்க கட்டிடம் முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் தன்னுடைய வருங்கால மனைவியான சாய் தன்ஷிகாவின் பிறந்த நாளை விஷால் கொண்டாடினார். அது சம்பந்தமான வீடியோவும் சோசியல் மீடியாக்களில் வைரலானது .இதற்கிடையில் அவருடைய உடல் நிலை காரணமாக பல விமர்சனங்கள் எழுந்தன. ஒரு விழாவில் மைக்கை பிடித்து பேசக்கூட முடியாத அளவுக்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
 
அவருடைய கைகள் நடுங்கின. குடித்துவிட்டு தான் அந்த விழாவிற்கு வந்தார் என்றும் அவர் முன்பு மாதிரி இல்லை. உடலில் பலவித பிரச்சனைகள் இருக்கின்றன என்றெல்லாம் அவருடைய உடல்நிலை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

webdunia
ஆனால் அதையெல்லாம் உடைத்து எரிந்து இன்று வேறொரு விஷாலாக மாறி இருக்கிறார். இப்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. செல்லமே படத்தில் எப்படி இருந்தாரோ அதே மாதிரியான லுக்கில் தான் தற்போது விஷால் இருக்கிறார்.கல்யாண கலை முகத்தில் தாண்டவம் ஆடுகிறதே என கிண்டலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்