திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, மற்றும் கோவை போன்ற தொலைதூர ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிநவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்களில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மட்டும் மொத்தம் 160 சிறப்புப் பேருந்துகள் (குளிர்சாதன வசதியுடன் மற்றும் இல்லாமலும்) இயக்கப்பட உள்ளன.
பயணிகள் இந்தச் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் இருபுறமும் முன்பதிவு செய்யலாம்.
பேருந்து சேவை குறித்த விவரங்களை கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.
மதுரை 9445014426
திருநெல்வேலி
9445014430
கோவை
9445014435
சென்னை தலைமையகம்
9445014463 மற்றும் 9445014424