நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படமான 'அரசன்' திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'அரசன்' படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்குகிறார். இது வெற்றி பெற்ற 'வடசென்னை' திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு இதில் நாயகனாக நடிக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்ற அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டார். அதில், “மனிதம் இணைகிறது, மகத்துவம் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர், மணிரத்னம் இயக்கிய 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்தில் சிம்புவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி இணைந்ததன் மூலம், 'அரசன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.