இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கவுகாத்தி நகரில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியின் முத்துசாமி மிக அபாரமாக விளையாடி 109 ரன்கள் எடுத்தார். அதேபோல், மார்கோ ஜான்சன் 93 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், சிராஜ், பும்ரா மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஆட்ட நேரம் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.