இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி குவித்த 489 ரன்களுக்கு பதிலடி கொடுத்து விளையாடி வரும் இந்திய அணியில், ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, அவர், 97 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஆனால், சிமோன் ஹார்மர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த அரைசதத்தின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் இங்கிலாந்தின் சாக் க்ராவ்லி ஆகியோரை ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார். இது ஜெய்ஸ்வாலின் 20வது அரைசதம் ஆகும்.
அவர் தற்போது, 21 முறை அரைசதம் எடுத்திருக்கும் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னாவை விட ஒரு ஸ்கோர் மட்டுமே பின் தங்கியுள்ளார். அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்:
திமுத் கருணாரத்னா: 21 (64 இன்னிங்ஸ்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 20* (52 இன்னிங்ஸ்)
சாக் க்ராவ்லி: 19 (89 இன்னிங்ஸ்)
உஸ்மான் கவாஜா: 19 (73 இன்னிங்ஸ்)
டாம் லதாம்: 18 (70 இன்னிங்ஸ்)
கிரைக் பிராத்வைட்: 17 (82 இன்னிங்ஸ்)
பென் டக்கெட்: 17 (57 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா: 17 (66 இன்னிங்ஸ்)
Edited by Siva