Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

Advertiesment
ரஜினி

Bala

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (10:01 IST)
ரொம்ப வருடங்களாக திரை துறையில் இருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு ஆசை இருக்கும். ரஜினி கமல் இரண்டு பேரையும் ஒரு நாணயத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை. அதாவது இவர்கள் இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்க முடியாதா என பல இயக்குனர்கள் இன்று வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டாரோ சுந்தர் சி என்று அனைவருமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். 
 
அது நின்று போய்விட்டது என சாதாரணமாக நம்மால் கடந்து விடவும் முடியாது. கமலை வைத்து படம் எடுப்பது கடினம். ஆனால் ரஜினியை வைத்து படம் எடுப்பது ஈஸிதானே? அப்புறம் ஏன் சுந்தர் சி விலகினார் என்ற ஒரு கேள்விக்கு ரமேஷ் கண்ணா அவருடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். கமல் தயாரிப்பு மற்றும் ரஜினி ஹீரோ என்றால் அந்தக் கதை எவ்வளவு வெயிட் ஆக இருக்க வேண்டும். அப்போ அதற்கான ஸ்கிரிப்ட் தயார் பண்ண நேரம் வேண்டும்.
 
ஏனெனில் கமல் இந்த படத்தை சீக்கிரமாக பண்ண வேண்டும் என சொல்லிவிட்டார். சுந்தர் சி ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் .ஒரு படம் ஐசரி கணேஷ் தயாரிப்பு இன்னொரு படம் விஷால் வைத்து எடுக்கப் போகிறார். இரண்டு படங்களும் நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்த இரண்டு படங்களையும் விட்டுவிட்டு ரஜினி கமல் படத்திற்குப் போனால் அது நன்றாக இருக்காது. நன்றி கெட்ட தனமாக இருக்கும். பெரிய ஆள்கள் கிடைத்ததும் கழட்டி விட்டு போகிறார் என்ற ஒரு பேரு வந்துவிடும். இந்த காரணம் தான் சுந்தர் சி விலகியதற்கு காரணம்.
 
இது ஒரு கோல்டன் வாய்ப்பு. இதை மிஸ் பண்ணி விட்டாரே என்ற கேள்விக்கும் ரமேஷ் கண்ணா அப்படி எல்லாம் கிடையாது .இந்த படம் இல்லைனா சுந்தர் சி வேற படம் பண்ண மாட்டாரா? அவருடைய எல்லா படங்களும் ஹிட்டடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுதும் ஒரு படம் பண்ணுகிறார். அதுவும் வெற்றியடைய தான் போகிறது. ரஜினி கமல் அப்படிங்கிறது ஒரு பெரிய காம்பினேஷனில் வருகிறது என்று நினைத்தாலும் அது நாம் நினைத்துக் கொள்வது தான்.
 
ஆனால் அப்படி எதுவுமே கிடையாது. கமல் புரொடக்ஷன் ரஜினி சார் நடிக்கிறார். அவ்வளவுதான். கமலுக்கு கடன் ஆகிவிட்டது. அவருக்காக ரஜினி உதவி செய்கிறார். அவ்வளவுதான். அப்படியே அவங்க ரெண்டு பேரும் நடிச்சு அந்தப் படம் நம்ம வாழ்க்கையை உயர்த்தும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. அது பண்றதும் மிகவும் கஷ்டம் .கமலையும் ரஜினியையும் சேர்த்து வைத்து பண்ணுவது மிகவும் கஷ்டம்.
 
நடக்க முடியாத காரியம். அதை செய்து விட்டால் அது உலகமகா ரெக்கார்டு. இந்த படத்தை மூன்று மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என கமல் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. மூன்று மாதத்திற்குள் தன்னால் முடியாது என்று சுந்தர் சி சொன்னது தான் இதன் முக்கிய காரணம். மற்றபடி youtube-ல் பேசுகிற மாதிரி எல்லாம் கிடையாது. சுந்தர்சி நேரம் கேட்டார். அது அவர்களால் முடியவில்லை. அவ்வளவுதான் என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!