திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு தீர்த்தீஸ்வரர் திருக்கோயில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான சிவாலயமாகும்.
கருவறையில் சதுர ஆவுடையார் மீது தீர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை மனமுருக வழிபட்டால், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகி, வாழ்வில் நற் திருப்பங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு பங்குனி மாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள், சூரிய ஒளி நேரடியாக மூலவர் மீது விழும் அரிய நிகழ்வு நடக்கிறது.
அசுரர்களை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க, மகாவிஷ்ணு இங்குள்ள தீர்த்தீஸ்வரரை நோக்கித் தவமிருந்தார். அதனால் இங்கு மால்வினை தீர்த்த சிவனும் மகாவிஷ்ணுவும் ஒரே சந்நிதியில் உள்ளனர்.
திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடப்பது இக்கோயிலின் கூடுதல் சிறப்பாகும்.
வடமேற்கு மூலையில் தர்மசாஸ்தா ஐயப்பனுக்குத் தனி சந்நிதி உள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 6-11 மணி வரையிலும், மாலை 4-8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த கோவிலுக்கு சென்றால் திருப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.