Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆல்யா மனசாவிற்கு பெண் குழந்தையா.... அதீத மகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ !

webdunia
புதன், 18 மார்ச் 2020 (19:44 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இதையடுத்து தாய்மையடைந்த ஆல்யாவிற்கு சீமந்தம் நடத்தி அழகு பார்த்தார் சஞ்சீவ். மேலும், கடந்த சில நாட்களாகவே தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து கியூட்டான சில அப்டேட்டுகளை கொடுத்து வரும் அவர் தற்போது தன் குழந்தைக்கு தேவையான மெத்தை, தலையணை, உடை போன்ற பொருட்களை எல்லாம் இப்போதே வாங்கி உள்ளார். அதில் குழந்தைக்கு உடுத்தும் கௌன் ஒன்றை பதிவிட்டு பிறக்கப்போவது பெண் குழந்தை தான் என்பதை உறுதி செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளீரா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

அடங்கா பிடாரி ரகுல் ப்ரீத் சிங்கை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்!