பெங்களூருவுக்கு அருகில் உள்ள இராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் உள்ள ஒரு ரெசார்ட்டில், நேற்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இரவு முழுவதும் நடைபெற்ற 'ரேவ் பார்ட்டி' வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த போதை விருந்தில் கலந்துகொண்ட 115 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 35 இளம்பெண்கள் மற்றும் 3 சிறார்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மது அருந்தி போதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரெசார்ட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.