பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மீரா ஜாஸ்மின் என்ற எம்.எஸ்.சி. பட்டதாரி பெண், வேலை தேடி சென்ற நிலையில் காணாமல் போனார். இந்நிலையில், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காப்புக்காட்டில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, மீரா ஜாஸ்மினின் தாயார் கலாவதி மற்றும் உறவினர்கள் சடலத்தை பெற மறுத்து, மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்தன.
 
									
										
			        							
								
																	
	 
	கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் பரபரப்பு நிலவியது.