தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக கூறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
									
										
			        							
								
																	
	 
	கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு, விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது, மீனவ குடும்பத்தினர் மத்தியில் பெரும் பதற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த அராஜக போக்கைத் தடுக்க, மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும், நிரந்தரத் தீர்வு எட்டப்படாதது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.