செங்கல்பட்டு அருகே கொளத்தூரில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான துளசீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குச் சிவபெருமானுக்கு வழக்கமான வில்வ இலைகளுக்கு பதிலாக, துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுவது தனிச்சிறப்பாகும்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	கயிலாயத்திலிருந்து தெற்கே வந்த அகத்திய முனிவர், துளசி செடிகள் நிறைந்த இடத்தில் அசரீரி கேட்டு, சிவலிங்கத்தை கண்டறிந்தார். வேறு மலர்கள் இல்லாததால், துளசி இலைகளால் அர்ச்சித்து வழிபட்டார். அந்த பூஜையை ஏற்றுக்கொண்ட சிவன், அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
 
									
										
			        							
								
																	
	 
	துளசியை விரும்பி ஏற்றதால் இத்தல இறைவன் 'துளசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் 'வில்வநாயகி' (ஆனந்தவல்லி) என்று அழைக்கப்படுகிறார். இவரைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால், கணவன் - மனைவி ஒற்றுமை மேம்படும். சந்திர பலம் குறைந்தவர்கள் திங்கட்கிழமையில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.