சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. பராசக்தி திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தயாரித்து வந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங்கில் சிறு தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகிறது.
 
									
										
			        							
								
																	அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படத்தின் முதல் தனிப்பாடல் இவ்வாரத்தில் ரிலீஸாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை பாடியவர்கள் யார் என்பதையும் அறிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.