இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடைமுறை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசியிருப்பதாக, பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
SIR-இன் உண்மையான நோக்கம் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இறந்தவர் பெயர்களை நீக்குதல் மற்றும் இரட்டை வாக்குகளை அகற்றுதல் மட்டுமே. ஆனால் உதயநிதி, 'Revision' என்பதற்குப் பதிலாக 'Registration' என கூறியிருப்பது, அவருக்கு இந்த நடைமுறை குறித்த தெளிவு இல்லை என்பதை காட்டுவதாக தமிழிசை சுட்டிக்காட்டினார்.
தவறான வாக்காளர் முறைகேடுகளால் வெற்றிபெறும் திமுக, இந்த தீவிர திருத்தம், அவர்களால் சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை நீக்கிவிடும் என்ற பயத்தில் எதிர்க்கிறது," என்று தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டம் வெறும் அரசியல் நாடகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
SIR நடைமுறை நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி, பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.