இந்திய சினிமாவில் பேன் இந்தியா என்ற டர்ண்ட்டை உருவாக்கி பிராந்திய மொழி சினிமாக்களின் எல்லையை விரிவாக்கக் காரணமாக அமைந்த படங்கள் என்றால் அது ராஜமௌலி இயக்கிய பாகுபலிதான். அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் நேற்ற்ய் ரி ரிலீஸ் செய்தனர். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நாற்பத்து மூன்று நிமிடம் ஓடும் படமாக இந்த வடிவம் தொகுக்கப்பட்டிருந்தது.
 
									
										
			        							
								
																	இதனால் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. அதே போல தமன்னா- பிரபாஸ் சம்மந்தப்பட்ட காதல் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. படத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மூன்று நாளில் இதுவரை 24 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி தி எபிக் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.