Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

Advertiesment
கன்னடம்

Mahendran

, சனி, 1 நவம்பர் 2025 (15:42 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா, ராஜ்யோத்சவா தின விழாவில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்:
 
மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகவும், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளை புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படும்போது, செம்மொழியான கன்னடத்தின் வளர்ச்சிக்கு நிதி மறுக்கப்படுவது அநீதி என்றார்.
 
கல்வித்துறையில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆதிக்கம் செலுத்துவது, கர்நாடக குழந்தைகளின் இயற்கை திறனையும் படைப்பாற்றலையும் பலவீனப்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளில் தாய்மொழி கல்விக்கு உள்ள முக்கியத்துவம் இங்கு இல்லை என்றும் கவலை தெரிவித்தார்.
 
கர்நாடகா மத்திய அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டி தந்தாலும், அதற்குரிய நியாயமான வளங்கள் மறுக்கப்படுகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், கர்நாடகாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும் அவர் சாடினார்.
 
தாய்மொழி கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக்க வலுவான சட்ட நடவடிக்கைகள் தேவை என்றும், மத்திய அரசு இந்த விஷயத்தை முக்கியமாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!