நைஜீரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களை படுகொலை செய்வதை தடுக்காவிட்டால், அமெரிக்க இராணுவம் நேரடி நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தனது 'ட்ரூத்' சமூகவலைதள பதிவில், "கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நைஜீரியா கட்டுப்படுத்த தவறினால், அமெரிக்காவின் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்" என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், "பயங்கரவாதிகளுக்கு உடனடி முடிவுகட்ட அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
									
										
			        							
								
																	
	 
	இதற்கு பதிலளித்த நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு, அனைத்து மதத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தங்கள் அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நைஜீரியாவில் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.