சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படத்தின் பூஜை நடந்த சில மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. தற்போது திரைக்கதை செப்பனிடும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பைசன் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எழிலரசு இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.