அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 33 ஆண்டுகள் கழித்து தற்போது அணு ஆயுத சோதனையை தொடங்க உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் அதிக அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யா முதலிடத்திலும், அமெரிக்கா இர்ண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் சமீபமாக உக்ரைன் போரில் அமெரிக்காவின் சமரசத்திற்கு ரஷ்யா உடன்படாத நிலை உள்ள நிலையில், சீனாவுடன் அமெரிக்காவிற்கு வர்த்த பிரச்சினையும் தொடர்ந்து வருகிறது.
மற்றுமொரு சோசியலிஸ்ட் நாடான வடகொரியா ஆரம்பம் முதலே அமெரிக்காவுடன் பிணக்கில் இருந்து வருகிறது. வடகொரியாவிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன என்பது ரகசியமாகவே உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் 1992க்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள ராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் “அமெரிக்காவிடம் வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. எனது முதல் பதவிக் காலத்தில், ஏற்கனவே உள்ள ஆயுதங்களை முழுமையாகப் புதுப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் உட்பட இது நிறைவேற்றப்பட்டது. மிகப்பெரிய அழிவு சக்தி காரணமாக, நான் அதைச் செய்ய வெறுத்தேன், ஆனால் வேறு வழியில்லை! ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது, சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் 5 ஆண்டுகளுக்குள் கூட சமமாக இருக்கும்.
மற்ற நாடுகள் திட்டங்களைச் சோதிப்பதால், நமது அணு ஆயுதங்களை சமமாகச் சோதிக்கத் தொடங்குமாறு போர்த் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K