உலகக் கோப்பை மகளிர் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகச் சாம்பியன் ஆகியுள்ளது. பரபரப்பான இந்த போட்டியை இந்திய மகளிர் அணி வென்றதன் மூலம் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக ஷெஃபாலி வர்மா 87 ரன்களும்,  தீப்தி ஷர்மா 58 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். பின்னர் 299 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய தென்னாப்பிரிக்கா ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
 
									
										
			        							
								
																	அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாரா வூல்வார்ட் அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் சாய ஆரம்பித்தது. இதனால் 46 ஆவது ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 ரன்கள் மட்டும் சேர்க்க, இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது பிசிசிஐ.