Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

Advertiesment
நிவேதா பெத்துராஜ்

Siva

, ஞாயிறு, 2 நவம்பர் 2025 (17:01 IST)
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் விடியோக்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
 
தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "அபத்தமான செயற்கை நுண்ணறிவு விடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு, பார்ப்பதற்கு உண்மை போல் காட்சியளிப்பது மிகவும் மோசமானது. இந்த ஆபத்தான போக்கு தொடர்ந்து நீடித்தால், அது நமது எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்" என்று எச்சரித்தார்.
 
சமீபகாலமாக, பிரபலங்களின் உருவம் மற்றும் குரலை பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்பும் 'டீப்ஃபேக்' விடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், நிவேதாவின் இந்தக் கருத்து, திரையுலகம் இந்தத் தொழில்நுட்பத்தால் சந்திக்கும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டுகிறது.
 
 'ஒருநாள் கூத்து', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா, சமூக ஊடகங்களில் இந்த விவகாரத்தின் அபாயத்தை வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!