கணவருடன் சாய்பல்லவி நடித்த அந்த காட்சிகளை மட்டும் நீக்க சொன்னாரா சமந்தா...?

செவ்வாய், 5 மே 2020 (15:08 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட     காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது சமந்தாவின் கணவரும் நடிகருமான  நாக சைதன்யா ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சமந்தாவும்  நாக சைதன்யாவும் இணைந்து படம் எடுத்த வரையில் பார்த்ததாகவும், அதில் கணவரை விட நடிகை சாய்பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அதை மாற்றி அமைக்க சொல்லியதாக டோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் கொடுத்த படத்தரப்பு,  "இது வெறும் வதந்தி... படம் எடுத்து முடிப்பதற்குள் எப்படி படத்தை பார்க்கமுடியும்..? அத்தோடு நடிகர் நாக சைத்தன்யா ஒரு படத்தின் கதை கேட்டு நடிக்க ஒப்பந்தமான பிறகு, இயக்குநரிடம் அக்கதையில் எந்த ஒரு கரெக்ஷனும் சொல்ல மாட்டார்” என்று அடித்துக்கூறியள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அப்பாடா ஒருவழியா முடிந்தது... "மாஸ்டர்" சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி...!