கரூர் சம்பவம் விஜயையும், தவெகவினரையும் ஒரு மாத காலம் முடக்கிப் போட்ட நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அடுத்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருக்கிறார்கள்.
அதன்பின் வருகிற 16-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.
ஆனால் முதலில் இவர்கள் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனவே தற்போது மாற்று இடம் ஒன்றை தவெகவினர் தேர்ந்தெடுக்கிறார்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
7 ஏக்கர் அளவுள்ள பவளக்கம்பாளையத்தில் போதுமான இட வசதி இல்லை என்று காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தற்போது தேர்வு செய்துள்ள இடம் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது எனவும் அதில் 10 ஏக்கரில் கார் பார்க்கிங் 17 ஏக்கரில் பொதுக்கூட்டத்திற்கான பகுதி அமைக்க அமைக்க முடியும் என தவெகவினர் மனு கொடுத்திருக்கிறார்கள்.
அனேகமாக ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டத்திற்கு இந்த இடம் உறுதி செய்யப்படும் என கணிக்கப்படுகிறது.