Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழைப்பிதழ் வைக்கும் போது விஜய் சொன்ன விஷயம்! டி.சிவா பெருமிதம்

Advertiesment
விஜய்

Bala

, திங்கள், 8 டிசம்பர் 2025 (14:23 IST)
தமிழ் சினிமாவில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருப்பவர் டி சிவா. தன்னுடைய அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக பல வெற்றி படங்களை இவர் தயாரித்திருக்கிறார். பல நடிகர்களுடன் இவர் பயணத்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய ஒரே மகள் திருமணம் சமீபத்தில் தான் நடந்தது. திருமணம் மாப்பிள்ளையின் சொந்த ஊரான தஞ்சாவூரில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பை சென்னையில் நடத்தினார் டி சிவா.

 
இந்த திருமண வரவேற்பிற்க்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதில் டி சிவா ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜய் வந்தது தன்னால் மறக்கவே முடியாது. அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு ஆனந்தத்தில் நான் இருந்தேன். அவருடைய வருகை ஒட்டுமொத்த திருமண மண்டபத்திற்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
 
அப்படியே அனைவரும் உறைந்து போனோம் என்று டி சிவா சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அவர் வருவது எனக்கு ஏற்கனவே தெரியும் .நான் யாரிடமும் சொல்லவில்லை. ஏன் என்னுடைய குடும்பத்தினரிடம் கூட நான் சொல்லவில்லை. வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் நாங்கள் இருந்து விட்டோம். ஆனால் நிச்சயமாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
 
அவருடைய பிஸியான இந்த காலகட்டத்தில் வருவாரா இல்லையா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் வந்து என்னுடைய மகளை ஆசீர்வதித்து விட்டு போனது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது என டி சிவா கூறினார். கிட்டத்தட்ட 1500 பத்திரிகைகள் அச்சிடப்பட்டு கொடுத்திருக்கிறார் டி சிவா. அதில் விஜய்க்கு அழைப்பிதழ் வைக்கும் பொழுது நான் அவரை வரவேண்டும் என நிர்பந்திக்கவில்லை.
 
வந்தால் நன்றாக இருக்கும் என நான் கூறினேன். அதற்கு விஜய் அது என்ன வந்தால் நிச்சயமாக வருவேன் என கூறியது எனக்கு ஒரு பெரும் நம்பிக்கையை தந்தது என தெரிவித்திருக்கிறார் டி சிவா. என் மீது அவருக்கு இருந்த பாசத்தை அவருடைய வருகையிலிருந்து நான் புரிந்து கொண்டேன் என்றும் சிவா கூறியுள்ளார். அது மட்டுமல்ல மேடையில் போட்டோ எடுக்கும் பொழுது சொன்னதைப்போல வந்துட்டீங்க என்று சிவா கூறியிருக்கிறார்.
 
அதற்கு விஜய் நான் சொன்னதை செய்வேன் தெரியும்ல என தெரிவித்தாராம். விஜயின் பாதுகாப்பு குறித்து நான் எதுவும் பயப்படவில்லை. ஏனெனில் அரசியலுக்கு வந்த பிறகு அவர் முற்றிலும் வேறு ஒரு பாதுகாப்பில் இருக்கிறார். அதனால் அதைப் பற்றி நான் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. வரும்போது ஒரு காரில் வந்தார். போகும்போது வேறொரு காரில் சென்று விட்டார். ஏனெனில் வந்தவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வேறொரு வழியாக சென்று விட்டார் விஜய் என டி சிவா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு