Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

Advertiesment
Karthigai

Mahendran

, புதன், 3 டிசம்பர் 2025 (16:55 IST)
கார்த்திகை தீபத் திருவிழாவில் வீடுகளில் விளக்கேற்றுவது, நம் வாழ்வில் உள்ள இருள் நீங்கி ஞான ஒளி பிறக்கும் என்பதன் அடையாளமாகும். தீபத்தின் முகங்களும் அதை ஏற்றும் திசைகளும் பலன்களை நிர்ணயிக்கின்றன. ஒரு முகம் ஏற்றினால் நினைத்த காரியம் கைகூடும்; ஐந்து முகம் ஏற்றினால் சகல நலன்களும் உண்டாகும்.
 
கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் கிரக தோஷங்கள் நீங்கி குடும்பம் அபிவிருத்தி அடையும். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றுவது அமங்கலம் என்பதால் தவிர்க்க வேண்டும்.
 
நெய்யால் ஏற்றினால் செல்வம் பெருகும், நல்லெண்ணெய் ஆரோக்கியம் அளிக்கும். பஞ்ச கூட்டு எண்ணெய் குலதெய்வ அருளைப் பெற்றுத் தரும்.
 
பஞ்சுத் திரி குடும்ப சிறப்பிற்கு உதவுகிறது; தாமரை தண்டு திரி பாவங்களை போக்கி செல்வத்தை நிலைக்க செய்யும்.
 
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. வீட்டில், இன்று மாலை 6 மணிக்குக் குறைந்தபட்சம் 27 அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!