தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாத பேசுகையில், அணியில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் "சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக நன்றாக செயல்பட்டார், ஆனால் கில்லுக்கு முன் வாய்ப்பு அளிக்கப்பட்டதால், அந்த இடத்தை அவர் பெறுவதற்கு தகுதியானவர். துவக்க ஆட்டக்காரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் எந்த இடத்திலும் பேட் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று நான் கூறியுள்ளேன்," என்றார்.
சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் அணியில் தொடர்ந்து இருக்கிறார்கள் என்று உறுதியளித்த சூர்யகுமார், இருவரும் சிறந்த ஆட்டக்காரர்களாக இருப்பது அணிக்கு ஒரு நல்ல அம்சம் என்றும் குறிப்பிட்டார்.
கழுத்துக் காயத்திலிருந்து குணமடைந்த கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராக உள்ளனர் என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக அணி சேர்க்கையை உறுதிப்படுத்துவதே இப்போதைய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.