Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

Advertiesment
கே பி ஒய் பாலா

Bala

, திங்கள், 8 டிசம்பர் 2025 (15:54 IST)
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் கே பி ஒய் பாலா. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து விஜய் டிவியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கே பி ஒய் பாலாவின் பங்கு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து பல பேரின் கவனத்தை ஈர்த்தார் கே பி ஒய் பாலா. அதிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட புகழ், பெருமை வந்து சேர தொடர்ந்து பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் மாறினார். 

 
அதுமட்டுமல்ல பெரிய பெரிய விருது வழங்கும் நிகழ்ச்சியையும் கே பி ஒய் பாலா தொகுத்து வழங்கி வந்தார். ஒரு பக்கம் மீடியாவில் பிஸியாக இருந்தாலும் சமூக சேவை செய்வதிலும் பாலா பிசியாக இருந்து வருகிறார். மழை வெள்ள காலங்களில் ஏழை எளியவர்களுக்கு இல்லாதவர்களுக்கு என நிவாரண பொருட்களை வழங்கியதன் மூலம் இன்று வரை தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். ஆம்புலன்ஸ் வழங்குவது, டூவீலர் வழங்குவது என எண்ணற்ற பல உதவிகளை செய்து வந்த பாலாவை கடந்த மூன்று மாதமாக இந்த சமூகம் ஒதுக்கி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
 
ஏனெனில் ஒரு சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளரால் எப்படி இந்த அளவு உதவியை செய்ய முடியும் ? அவருக்கு பின்னணியில் ஏதாவது அமைப்பு இருக்கிறதா? அல்லது அவரை யாரோ ஆட்டுவிக்கிறார்களா என்றெல்லாம் பல சர்ச்சைகள் எழுந்தன. இதனால் பாலா ஒரு பக்கம் நொந்து கொண்டாலும் அவரை சார்ந்த ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இதிலிருந்து பாலா ஒரு இரண்டு மாத காலமாக எந்த உதவியும் செய்யாமல் இருந்தார். இதற்கிடையில் நேற்று திடீரென அவருடைய ஒரு புகைப்படம் வெளியானது. அதாவது சமீபத்தில் ஏற்பட்ட மலை புயலில் சென்னையில் உள்ள சில ரோடுகள் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்தன.
 
அதில் ஒரு தெருவில் உள்ள ரோட்டை சரி செய்யும் வகையில் ஜல்லிகளை ஒரு லாரி நிறைய எடுத்துக் கொண்டு வந்து பாலாவே அதை நிரப்பி அந்த ரோட்டை சமன் செய்து வந்தார். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை பாலா செய்தது பலபேருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதே சமயம் பாலாவின் இந்த செயல் பாராட்டையும் பெற்றது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது ஒருவர் நல்லது செய்ய வருகிறார் என்றால் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஆராய வேண்டாம். இரண்டு மாத காலமாக வெளியில் வராமல் இருந்த பாலாவை நேற்று பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறினார் அந்தணன்.
 
இதற்கிடையில் சிம்புவை பற்றி ஒரு தகவலும் வலைப்பேச்சு அந்தணன் பேசி இருந்தார். தனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் படிப்பு செலவுக்காக லாரன்ஸிடம் பணம் கேட்டாராம். அவரும் கொடுத்திருக்கிறார். முதல் வருட கல்லூரி படிப்பை லாரன்ஸ் கொடுத்த பணத்தின் மூலம் தான் தட்டி இருக்கிறார். அதேபோல மூன்றாவது ஆண்டு படிப்புக்கும் அந்த பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டிருக்கிறது.
 
அதற்குள் லாரன்ஸ் செய்த அந்த உதவி பல பேருக்கு சர்ச்சைகளை ஏற்படுத்த லாரன்ஸ் சிறிது காலம் யாருக்கும் உதவி செய்யாமல் இருந்தாராம். அந்த நேரத்தில் இந்த பெண்ணுக்கு எப்படி உதவி கேட்பது என தயங்கி இருந்த அந்தணன் சிம்புவை அணுகி இருக்கிறார். உடனே சிம்பு எதுவும் யோசிக்காமல் அந்த பெண்ணுக்கு 80 ஆயிரம் கொடுத்து அவருடைய கல்லூரி படிப்பை தொடர செய்திருக்கிறார். இதை அந்தணன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 45, சூர்யா 46 இனிமேல் தான் ரிலீஸ்.. அதற்குள் சூர்யா 47 படப்பிடிப்பு தொடக்கம்..!