விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் நடிகர் ப்ரஜின் குறைந்த வாக்குகளால் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் நுழைந்த முதல் போட்டியாளர் இவர் ஆவார்.
ப்ரஜினின் வெளியேற்றத்தை அவரது மனைவி மற்றும் சக போட்டியாளரான சான்ட்ராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெளியேறுவதற்காக பிக் பாஸ் வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டபோது, சான்ட்ரா யாரும் எதிர்பாராத வகையில் ப்ரஜினுக்கு முன்பாகவே கதவை திறந்து வெளியே ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள், சான்ட்ராவை உள்ளே வருமாறு அழைத்தனர். வெளியே நின்ற ப்ரஜின், உணர்ச்சிவசப்பட்டிருந்த மனைவியை சமாதானப்படுத்தி, மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
கடந்த சில வாரங்களாக நன்றாக விளையாடிய ப்ரஜினின் வெளியேற்றம் எதிர்பாராத ஒன்று என்றும், இவர்களின் பாசப்பிணைப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், பிக் பாஸ் போன்ற ஒரு முக்கியமான போட்டியை இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.