தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் ஈரோடு சுற்றுப்பயணத்திற்கான பொதுக்கூட்டத்திற்கு, ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் டிசம்பர் 16 அன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்காக வாரி மகாலுக்கு அருகாமையில் உள்ள ஒரு தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க 'ரோட் ஷோ' தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், காவல்துறை விதிமுறைகளை பின்பற்றி வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணி குறித்து பேசிய அவர், பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், தான் எந்த நிபந்தனையும் விதிக்காமல், மனமுவந்து கட்சியில் இணைந்ததாகவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.