தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு பின், வெற்றி கேக்கை சாப்பிட மறுத்த ரோஹித் ஷர்மாவின் செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "குண்டாகிவிடுவேன்" என்று கூறி கேக்கை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
சமீப மாதங்களில், ரோஹித் ஷர்மா முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மேற்பார்வையில் தீவிர உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டு சுமார் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். வடா பாவ் போன்ற பிடித்த உணவுகளை தவிர்த்து, வாரத்தில் ஆறு நாட்கள் கடினமான உடற்பயிற்சி, கிராஸ்-ஃபிட் போன்ற தீவிர பயிற்சிகளை மேற்கொண்டதன் பலன் அவரது உடல் கட்டுக்கோப்பான தோற்றத்தில் உள்ளது.
இந்த தோற்றத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் வெற்றி பெற்ற பின் வெட்டப்பட்ட கேக்கை சாப்பிட தவிர்த்ததாக தெரிகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவர் அபாரமான ஃபார்மில் உள்ளார். அடிலெய்டில் 73 ரன்கள், சிட்னியில் அவுட்டாகாமல் 121 ரன்கள், அத்துடன் சமீபத்திய விசாகப்பட்டினம் போட்டியில் 75 ரன்கள் என நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.