2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்சிகளும் தங்களின் கூட்டணி வியூகங்களை வகுக்க துவங்கிவிட்டனர். இந்த தேர்தலில் புதிய கட்சியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. விஜய்க்கு பெண்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அவர் இந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவேதான் விஜயை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக-பாஜக கூட்டணி முயற்சி செய்தது. ஆனால் விஜய் அந்த வலையில் விழவில்லை. மேலும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயை நேரில் சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். கொங்க மண்டலத்தில் அவருக்கு முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் பலமுறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றதால் கண்டிப்பாக 2026 தேர்தலில் தவெக சார்பில் அவர் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் பிரபல சீரியல் நடிகர் ஜீவா ரவி செங்கோட்டையனை நேரில் சந்தித்து பேசியதோடு தான் விரைவில் தவெகவில் இணைவேன் எனவும் அறிவித்திருக்கிறார்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் நான் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளேன். அதுபற்றி உங்களுக்கு தெரிவிப்பேன் என செய்தியாளரிடம் சொல்லி இருக்கிறார். சீரியல் ரசிகைகளிடம் இவர் பிரபலம் என்பதால் கண்டிப்பாக இவருக்கும் எம்எல்ஏ சீட் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தில்.