சர்வதேச அளவில் உருவான திரைப்படங்களையும், புதுமையான சினிமா படைப்புகளையும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை, 23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்திய திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த நிகழ்வை நடத்துகிறது.
இந்த ஆண்டு திரைப்பட விழாவில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
திரையிடத் தேர்வான 12 தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ:
பிடிமண்
காதல் என்பது பொது உடைமை
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்
பறந்து போ
டூரிஸ்ட் ஃபேமிலி
வேம்பு
இந்த 12 திரைப்படங்களும், தமிழ் சினிமா கலைஞர்களின் புதிய முயற்சிகளை வெளிப்படுத்துவதோடு, பல்வேறு புதிய கதை களங்களை உலகத் தரத்தில் திரையிட உள்ளன. திரைப்பட ஆர்வலர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சர்வதேச மற்றும் உள்ளூர் சினிமாவின் சிறந்த படைப்புகளை கண்டு ரசிக்கலாம்.