அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தி.மு.க.வை வீழ்த்துவதற்கு, தற்போதைய சூழலில் சில கட்சிகள் பிளவுபட்டுள்ளதையும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகியிருப்பதையும் சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமையும் பட்சத்தில், அது வரும் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டிக்கு வழிவகுக்கும். தி.மு.க. கூட்டணி, சீமான் தனித்து போட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி - மற்றும் த.வெ.க. கூட்டணி என போட்டி அமையும்.
த.வெ.க. தலைமையிலான கூட்டணி பலமாக இருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்றும், இது எடப்பாடி பழனிசாமி மீதான வருத்தத்தால் அல்ல, யதார்த்தத்தை கொண்டே சொல்வதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.