தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், மிக விரைவில் நமக்கு ஒரு முக்கிய சின்னம் கிடைக்கப் போகிறது என்றும், அந்த சின்னம் என்ன என்பது தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அதிகாரப்பூர்வ ஆணை வரும் வரை வெளியே சொல்லக்கூடாது என்பதால் சொல்லாமல் இருக்கிறேன் என்றும் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று சின்னங்கள் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத்திற்குக் கிடைக்கக்கூடிய சின்னத்தை பார்த்து அனைவரும் வியக்க போகிறார்கள், நாடே ஆச்சரியப்பட போகிறது என்றும், தமிழகத்தில் நம்முடைய இயக்கம் போல் எந்த இயக்கமும் இருக்க முடியாது என்றும் அவர் பேசினார்.
மிக விரைவில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், அந்த சின்னம் என்னவாக இருக்கும் என்பதை அறிய தொண்டர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.