Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநரின் அடுத்த படைப்பு: 'பாலன்' படப்பிடிப்பு நிறைவு!

Advertiesment
மஞ்சும்மல் பாய்ஸ்

Siva

, திங்கள், 8 டிசம்பர் 2025 (14:45 IST)
ரூ. 200 கோடி வசூலை குவித்து பாலிவுட் வரை கவனம் ஈர்த்த மலையாள திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம், தனது அடுத்த படைப்பான 'பாலன்' திரைப்படத்தை நிறைவு செய்துள்ளார். 
 
குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கு கொண்டு வந்த சிதம்பரத்தின் அடுத்த படத்திலும் ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
 
'ஆவேசம்' திரைப்படத்தின் கதையாசிரியர் ஜித்து மாதவன் இந்த படத்தின் கதை வசனத்தை எழுதியுள்ளார். இதுவும் காமெடி த்ரில்லர் பாணியில், ஓர் அம்மாவுக்கும் அவரது மகனுக்கும் இடையிலான கதையை மையமாகக் கொண்டது. படத்தில் சிறுவனின் கதாபாத்திரம் அழுத்தமாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கே.வி.என் நிறுவனம் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித் மற்றும் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மீண்டும் இணைந்துள்ளனர். 
 
கேரளாவின் திருவனந்தபுரம், வயநாடு போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 'பாலன்' திரைப்படத்தை வரும் கோடைக்காலத்தில் திரையிட
த் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழைப்பிதழ் வைக்கும் போது விஜய் சொன்ன விஷயம்! டி.சிவா பெருமிதம்