Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திராட்சை பழம் சாப்பிட்டு வருவதால் குணமாகும் நோய்கள் என்ன...?

webdunia
திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ அதிகமாக  காணப்படுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மற்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
திராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.
 
திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும்  காணப்படுகின்றன.
 
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக்  அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
 
மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுவலிக்கு தினமும் திராட்சை சாறு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல நாற்பது வயதுக்கு மேல் வரும்  மெனோபாஸ் பிரச்சனை தீர திராட்சை பழம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 
சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும்  நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த  பலனை தரும்.
 
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

டிராகன் பழத்தில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் !!