நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவிருந்த 'கைதி 2' திரைப்படம் கைவிடப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், கார்த்தி இந்த படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் LCU அங்கமான கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். முதலில், இதன் படப்பிடிப்பு இந்த டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' படத்திலும், லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தனது 'வா வாத்தியார்' திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தியிடம், "கைதி 2 படம் என்ன ஆனது?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எனக்கு அப்படம் குறித்த எந்த அப்டேட்டும் தெரியாது" என்று பதிலளித்தார். இதனால், 'கைதி 2' திட்டம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.