இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறது. நேற்று காலை சந்தை உயருவது போல் காணப்பட்டாலும், மதியத்திற்கு மேல் திடீரென சரிந்தது.
இந்த நிலையில், இன்று ஆரம்பத்திலேயே பங்குச்சந்தை சரிந்து வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சரிவு காரணமாக ஏராளமான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிந்து 84,842 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 25,725 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் விலை உயர்ந்த பங்குகள்:
அப்பல்லோ ஹாஸ்பிடல்
பஜாஜ் ஆட்டோ
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
இன்ஃபோசிஸ்
ஜியோ ஃபைனான்ஸ்
கோடக் மஹிந்திரா வங்கி
மாருதி
ஸ்ரீராம் ஃபைனான்ஸ்
டாடா ஸ்டீல்
இன்றைய பங்குச் சந்தையில் விலை குறைந்த பங்குகள்:
ஏசியன் பெயிண்ட்
ஆக்ஸிஸ் வங்கி
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரதி ஏர்டெல்
ஹெச்.சி.எல். டெக்னாலஜி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
இன்டிகோ
டி.சி.எஸ்.
Edited by Siva