பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனாவின் தங்கை சீதாவின் கணவர் அருண் அம்மாவாக நடித்தவர் ராஜேஸ்வரி. இவர் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவர் சென்னையில் வசித்துவந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக துயரமடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சமீபத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவு, சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.