இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தான் அறிவித்திருந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் உடல் எடை அதிகம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மனவேதனையில் இருந்த அவர், தற்போது மீண்டும் களம் காணவிருக்கிறார்.
சமீபத்தில் ஹரியானா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஆண் குழந்தைக்கு தாயான 31 வயது வினேஷ் போகத், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த முடிவை அறிவித்தார். "நான் இன்னும் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். என் மீதான தீ அணையவில்லை" என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
அவர், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியை இலக்காக வைத்து பயமின்றி முன்னேற போவதாகவும், இந்த முறை தனது மகனும் சியர் லீடராக உடன் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்த புதிய அறிவிப்பு இந்திய விளையாட்டு துறையில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.