வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்ததால், மாப்பிள்ளையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்பவரை காதலித்து வந்ததாகவும், இரு தரப்பினரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர் என்பதால், இந்த திருமணத்திற்குப் பெண்ணின் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில், பெண்ணின் வீட்டுக்கு தெரியாமல் வேளாங்கண்ணியில் ராகுல் மற்றும் கீர்த்தனா திருமணம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை மற்றும் அவருடைய குடும்பத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டி சென்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாப்பிள்ளை ராகுல் மற்றும் அவரின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.