Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

Advertiesment
வைபவ் சூரியவம்சி

Mahendran

, வெள்ளி, 12 டிசம்பர் 2025 (12:40 IST)
19 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று இந்தியா மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டாஸ் வென்ற யுஏஇ அணை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது.
 
இந்திய அணியை நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்சி அபாரம் ஆக விளையாடி வருகிறார். அவர் 87 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்களுடன் 163 ரன்கள் அடித்து இன்னும் ஆட்டம் விடாமல் களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி 30 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் வைபவ் சூரியவன்சி இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் சூரியவன்சி மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எட்டு நாடுகள் கொண்ட 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன என்பதும், இந்த போட்டியின் இறுதி போட்டி டிசம்பர் 25ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!