குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்க பயன்படுத்தப்படும் பாடி லோஷனை முகத்துக்கு பயன்படுத்துவது தவறு என எச்சரிக்கப்படுகிறது.
உடல் சருமமும் முக சருமமும் வேறுபட்டவை. முக சருமம், குறிப்பாக மேல் உதட்டு பகுதிகள், மிகவும் மென்மையானவை. உடலுக்காக தயாரிக்கப்பட்ட கனமான லோஷனை முகத்தில் பயன்படுத்தினால், அது ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
இதேபோல, தேங்காய் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்துவது சில சரும வகைகளுக்கு கருமை நிற மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கு ஒரே தீர்வு, முகத்திற்கு எப்போதும் மாய்ஸ்ச்சரைசர் கிரீம் பயன்படுத்துவதுதான். சருமம் எண்ணெய் பசையாக இருந்தாலும், வறண்டதாக இருந்தாலும், 'வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைசர்' கிரீம்களை பயன்படுத்துவதே சிறந்தது. இது முகத்தின் ஈரப்பதத்தை நாள் முழுவதும் தக்கவைக்கும்.