வனிதாவுக்கு எதிராக புதிய கூட்டணி
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்திகளை முந்தி கொண்டு வைரல் ஆகி வருவது வனிதாவின் திருமணம் குறித்த செய்திகள்தான். பீட்டர் பால் அவர்களை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட வனிதா சர்ச்சைக்குரிய நபராக மாறி விட்டார்
பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் முதலில் பேட்டியளித்த வீடியோக்கள் வைரல் ஆகிய நிலையில் வனிதாவின் திருமணத்தை கண்டித்து வீடியோக்கள் வெளியிட்ட திரையுலக நட்சத்திரங்களின் வீடியோக்களும் வைரலாகியது. குறிப்பாக சூர்யா தேவி என்ற பெண் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோக்களும் அதற்கு பதிலடி கொடுத்த வனிதாவின் வீடியோக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வனிதாவுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வந்த எலிசபெத் மற்றும் சூர்யாதேவி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து விட்டதாக தெரிகிறது. இருவரும் இணைந்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
இதனையடுத்து வனிதாவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியே உருவாகியிருப்பதாகவும், இந்த கூட்டணியை வனிதா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது