மத்திய பிரதேச மாநிலம் கட்னியில், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணி மண்டல தலைவர் நீலு ராஜக் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு முகமூடி அணிந்த நபர்களால் பகல் 11 மணியளவில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரின்ஸ் மற்றும் அக்ரம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பிரின்ஸின் தந்தை, தனது மகனின் செயல் குறித்து அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆறு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக், இந்தக் கொலையை மத ரீதியாக திருப்புவது போல, நீலு ராஜக் 'லவ் ஜிஹாத்' விவகாரத்தில் தலையிட்டதாலேயே மிரட்டப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொலைக்கு காவல்துறை மற்றும் தொழிலதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக பதட்டத்தை தடுக்க, கைமோர் பகுதியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதாக காவல்துறை உறுதியளித்துள்ளது.